காஞ்சிபுரம்

கடத்தப்பட்ட ரூ 1.6 கோடி மதிப்புள்ள மடிக்கணினிகள் மீட்பு: ஒருவர் கைது

DIN

ஒரகடம் சிப்காட் பகுதியில் ரூ. 1.6 கோடி மதிப்புள்ள 209 மடிக்கணினிகள் லாரியுடன் கடத்தப்பட்ட வழக்குத் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 
ஒரகடம் சிப்காட் பகுதியில் உள்ள டெல் நிறுவன கிடங்குக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படும் மடிக்கணினிகள் சரக்குப் பெட்டக லாரிகளில் எடுத்து வரப்படுகின்றன.
இந் நிலையில் கடந்த 6-ஆம் தேதி இரவு சீனாவில் இருந்து வந்த ரூ. 1.60 கோடி மதிப்புள்ள 209 டெல் மடிக்கணினிகளை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரகடம் கிடங்கிற்கு லாரி மூலம் வண்டலூர்- வாலாஜாபாத் சாலை வழியாக எடுத்துவந்தனர் வஞ்சுவாஞ்சேரி அருகே காரில் வந்த மர்ம நபர்கள் லாரியை மடக்கி ஓட்டுநர் பாலசுப்பிரமணி மற்றும் உதவியாளரை மிரட்டி கீழே இறக்கி காரில் ஏற்றி கடத்தியதோடு லாரியையும் கடத்திச் சென்றனர். 
இதுகுறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். காஞ்சிபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த மடிக்கணினிகள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 
விசாரனையில் சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பழனி(46), தனது கூட்டாளிகளுடன் லாரியை கடத்திச் சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து பழனியை கைது செய்து விசாரனை நடத்தியதில் கடத்தப்பட்ட மடிகணினிகள் ராயபுரம் பகுதியில் உள்ள கிடங்கில் பதுக்கிவைத்திருந்ததை அறிந்து மீட்டனர். பழனியை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT