முகப்பு
காஞ்சிபுரம்

கூட்டுறவு சங்கத் தேர்தல்: அதிமுக, திமுகவினர் வேட்பு மனு தாக்கல் 

கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கான 4ஆம் கட்டத் தேர்தலையொட்டி உறுப்பினர்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பெரியகாஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக உறுப்பினர்கள்.
பகிர்:

கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கான 4ஆம் கட்டத் தேர்தலையொட்டி உறுப்பினர்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர். 
மாவட்டத்தில் செயல்படும் 249 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில், 66 கூட்டுறவு சங்கங்களுக்கான 4ஆவது கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்படி, காஞ்சிபுரம் அண்ணா, திருவள்ளுவர், முருகன், காஞ்சி பட்டு கூட்டுறவு சங்கங்கள், பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், அதிமுக மாவட்டச் செயலர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த கூட்டுறவு சங்க உறுப்பினர்களும், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தலைமையில் திமுக உறுப்பினர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 
இதையடுத்து, மே 2 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனையும், 7ஆம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்ரீபெரும்புதூரில்....
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி முன்னிலையில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர். 
தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்தது. 
இந்நிலையில், மூன்றாவது கட்டத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில், ஸ்ரீபெரும்புதூர், மொளச்சூர், மதுரமங்கலம், பிச்சிவாக்கம் ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ கே.பழனி முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அப்போது, அக்கட்சியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர்கள் சிவகுமார், பிள்ளைப்பாக்கம் மூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதேபோல், திமுகவைச் சேர்ந்த வேறு சிலரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →