முகப்பு
காஞ்சிபுரம்

தொழிலாளர் தினம்: இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

தொழிலாளர் தினத்தையொட்டி (மே 1) காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் செவ்வாய்க்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தொழிலாளர் தினத்தையொட்டி (மே 1) காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் செவ்வாய்க்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தொழிலாளர் தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 633 ஊராட்சிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டம், அனைத்து ஊராட்சிகளின் தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் நடத்தப்படவுள்ளது. இதில், குடிநீர் சிக்கனம், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது, கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட கருத்துக் கேட்பு, வரும் அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் வறுமை இல்லாத ஊராட்சியாக மாற்றுவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 
மேலும், கிராம ஊராட்சி செலவின அறிக்கை, நிகழாண்டு ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு திட்ட அறிக்கை தயாரித்தல், பசுமை வீடுகள் திட்டம், பிரதமர் குடியிருப்புத் திட்டம் ஆகியவற்றில் கடந்த 2011-இல் விடுபட்ட பயனாளிகளின் பெயர்களைப் பட்டியலில் சேர்த்தல், திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லாத ஊராட்சியாக மாற்றுதல் குறித்தும் விவாதிக்கப்படள்ளது.
அதேபோல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட சாத்தியப் பணிகள், கிராம வளர்ச்சி திட்டப் பணிகள், நிதிச் செலவின விவரங்கள், ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டங்கள், குழந்தைகளுக்கான 24 மணிநேர இலவச அவசர உதவி விழிப்புணர்வு உள்ளிட்ட 14 வகையான கொள்கைகள் குறித்து ஊராட்சி மன்ற தனி அலுவலருடன் கலந்தாலோசனை செய்யப்படவுள்ளது என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.