முகப்பு
காஞ்சிபுரம்

நீட் நுழைவுத் தேர்வைக் கண்டித்து திமுக பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நீட் நுழைவுத் தேர்வைக் கண்டித்து திமுகவினர் திங்கள்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

நீட் நுழைவுத் தேர்வைக் கண்டித்து திமுகவினர் திங்கள்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் நீட் நுழைவுத் தேர்வைக் கண்டித்து  வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்துக்கு, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அசோகன், திமுக நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி, செய்யூர் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவர் மதியழகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
இதில் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்க செயல் தலைவர் தயாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், நீட் நுழைவுத் தேர்வைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
இதில்,  தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்,திராவிடர் கழகம், இஸ்லாமிய கட்சிகளின் நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →