மாணவரைத் தாக்கியதாக தனியார் காப்பக வார்டன் மீது வழக்கு
மாமல்லபுரம் அருகே தனியார் காப்பகத்தில் தங்கிப் படித்து வந்த மாணவனை தாக்கியதாக வார்டன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாமல்லபுரம் அருகே தனியார் காப்பகத்தில் தங்கிப் படித்து வந்த மாணவனை தாக்கியதாக வார்டன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாமல்லபுரம் அருகே குழிப்பாந்தண்டலம் கிராமப் பகுதியில் தனியார் காப்பகம் உள்ளது. இங்கு பள்ளி செல்லும் மாணவர்கள் தங்கியுள்ளனர்.
இக் காப்பகத்தில், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 12 வயதான 7-ஆம் வகுப்பு மாணவர் தங்கியிருந்தார். இந்நிலையில், காப்பகத்தில் உள்ள காணிக்கை உண்டியலில் திருடியதாகக் கூறி காப்பாளர் சிறுவனை புதன்கிழமை கம்பியால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மாணவனின் காலில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், தனது மகனை அடித்து காயப்படுத்தியதாகக் கூறி, சிறுவனின் தந்தை மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து, தனியார் காப்பக வார்டன் ராபர்ட் (21) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.