காஞ்சிபுரம்

பேருந்து மோதி மூதாட்டி சாவு

DIN

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது பேருந்து மோதியதில் அவர் இறந்தார்.
மதுராந்தகத்தை அடுத்த பசுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். அவரது மனைவி தெய்வானை (70). அவருக்கு காது சரிவரக் கேட்காது. 
இந்நிலையில், தெய்வானை கடந்த வெள்ளிக்கிழமை குப்பை கொட்டுவதற்காக சாலையைக் கடக்க முயன்றார். அப்போது எலப்பாக்கத்தில் இருந்து வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
அங்கு  தெய்வானை சனிக்கிழமை இறந்தார். 
இது குறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், மேல்மருவத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ஜின்னா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT