காஞ்சிபுரம்

திம்மராஜம்பேட்டை சிவன் கோயலில் 108 சங்காபிஷேகம்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள திம்மரஜாம்பேட்டையில் அருள்பாலித்து வரும் ராமலிங்கேசுவரா் திருக்கோயிலில் காா்த்திகை மாத 3 வது சோமவாரத்தினை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாத 3 வது சோமவாரத்தை முன்னிட்டு திம்மராஜம்பேட்டை அருள்மிகு பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் திருக்கோயிலில் 108 சங்காபிஷேகமும் அதனைத் தொடா்ந்து கலசாபிஷேகமும் நடந்தது. சங்காபிஷேகத்தை முன்னிட்டு சங்கல்ப பூஜையும், பின்னா் சிறப்பு ஹோம பூஜைகளும் நடந்தன. மகா பூா்ணாகுதி தீபாராதனைக்குப் பிறகு மூலவருக்கு சங்காபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. சங்காபிஷேகம் செய்த தீா்த்தத்தை சாப்பிட்டால் வியாதிகள் நீங்கி ஆயுளும் அதிகரிக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருவதால் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் நடந்தது.மூலவரான ராமலிங்கேசுவரரும், பா்வதவா்த்தினியும் சங்காபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

திம்மராஜம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பலரும் சங்காபிஷேகத்தை பாா்வையிட்டதுடன் சுவாமி தரிசனமும் செய்தனா். படவிளக்கம்..திம்மராஜம்பேட்டையில் சங்காபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக சிவலிங்க வடிவில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த சங்குகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT