காஞ்சிபுரம்

இரு சக்கர வாகனங்கள் மோதல்: முதியவர் சாவு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் முதியவர் உயிரிழந்தார். 

DIN


செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் முதியவர் உயிரிழந்தார். 
செங்கல்பட்டு அழகேச நகரைச்சேர்ந்தவர் சுப்பிரமணி (65). தேநீர் கடை மற்றும் பேக்கரி வைத்து நடத்தி வந்தார். இவர், வியாழக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே சாலையைக் கடக்க திரும்பியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மொபெட் சுப்பிரமணியின் இரு சக்கர வாகனம் மீது மோதி விட்டுச் சென்றது. 
இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுப்பிரமணி உயிரிழந்தார். 
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீஸார், சுப்பிரமணியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய மொபெட்டில் சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT