காஞ்சிபுரம்

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருந்தாக்கியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், 15-ஆம் ஆண்டு சிறப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சி மதுராந்தகத்தை அடுத்த

DIN


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருந்தாக்கியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், 15-ஆம் ஆண்டு சிறப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சி மதுராந்தகத்தை அடுத்த திருமுக்காடு கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் மருத்துவர் இ. ஸ்ரீலேகா செந்தில்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலரும், உதவிப் பேராசிரியருமான 
எஸ்.முருகன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டி.வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். 
நிகழ்ச்சியில், உத்தமநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை பி.சரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் எஸ்.முருகன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 
வருகிற புதன்கிழமை (ஜன. 9) வரை நடைபெற உள்ள இம்முகாமில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, உடற்பயிற்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT