காஞ்சிபுரம்

கிணற்றில் தூர்வாரும் போது மயங்கி விழுந்த இருவர் மீட்பு

செங்கல்பட்டு அருகே வல்லம் கிராமத்தில் கிணற்றைத் தூர் வாரும் போது மயங்கி விழுந்த இருவரை தீயணைப்புத் துறையினர் வியாழக்கிழமை மீட்டனர்.

DIN

செங்கல்பட்டு அருகே வல்லம் கிராமத்தில் கிணற்றைத் தூர் வாரும் போது மயங்கி விழுந்த இருவரை தீயணைப்புத் துறையினர் வியாழக்கிழமை மீட்டனர்.  
 வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது வீட்டுக் கிணற்றைத் தூர் வாருவதற்கு, செங்கல்பட்டு சாஸ்திரி நகரைச் சேர்ந்த முனுசாமி (29), கோகுல புரத்தைச் சேர்ந்த கார்த்திக் (27) ஆகிய இருவரும் வியாழக்கிழமை வந்தனர். 
கிணற்றில் இறங்கிய போது இருவரும்  மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு  தீயணைப்புத் துறை வீரர்கள் இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

SCROLL FOR NEXT