காஞ்சிபுரம்

செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் 700 மாணவர்களுக்கு சேர்க்கை

DIN


செங்கல்பட்டில் உள்ள ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் 700 மாணவர்களுக்கு சேர்க்கை முடிந்துள்ளதாக கல்லூரி முதல்வர் சிதம்பர விநாயகம் தெரிவித்தார்.
பிளஸ் 2 முடிந்த மாணவ, மாணவிகள் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு பட்டப் படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தனர். இதில் நேர்முகத் தேர்வு முடிந்து, கல்லூரியில்  மாணவர் சேர்க்கை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றது வந்தது. 
இதுகுறித்து கல்லூரி முதல்வர் சிதம்பர விநாயகம் கூறியது:
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 4 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. அதன்படி 12 பாடப் பிரிவுகளில் 700 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 
அனைத்துப் பிரிவுகளிலும் சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடங்களில் 32 இடங்கள் காலியாக உள்ளன. இஸ்லாமியருக்கான 11 இடங்களும், அருந்ததியருக்கான ஒதுக்கீட்டில் 4 இடங்களும், எஸ்டி பிரிவில் ஓரிடமும் இன்னும் காலியாக உள்ளன. 
மேலும் தமிழக அரசு இந்த ஆண்டு அரசு கலைக் கல்லூரிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 100 மாணவ, மாணவிகளைச் சேர்க்கலாம். இதற்கான சேர்க்கை 18-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT