காஞ்சிபுரம்

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு  இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தனியார்  தொழிற்சாலையில்  பணிபுரிந்த 272 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

DIN


தனியார்  தொழிற்சாலையில்  பணிபுரிந்த 272 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வந்தது. இத்தொழிற்சாலையில் 272 ஒப்பந்தத்  தொழிலாளர்கள் கடந்த  2013-ஆம்  ஆண்டு முதல்  பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், இத்தொழிற்சாலை கடந்த டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் மூடப்பட்டது.
 இந்த நிலையில், தொழிற்சாலையில்  பணிபுரிந்த நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதுபோல், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.பி.சி.தனசேகரன் தலைமையில் தொழிலாளர் நல துணை ஆணையர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT