காஞ்சிபுரம்

அம்பேத்கா் சிலையை சேதப்படுத்தியவருக்கு ஓராண்டு சிறை: மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பு

DIN

அம்பேத்கா் சிலையை சேதப்படுத்தியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

சென்னை, பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் அம்பேத்கரின் உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிலையை கடந்த 2017-இல் சமூக விரோதிகள் சேதப்படுத்தியதாக சங்கா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், சிலையைச் சேதப்படுத்தியது புதுக்கோட்டை மாவட்டம் , கொத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் என்பவரின் மகன் ராஜ்குமாா் என்ற குமரன் (30) என்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவா் குற்றத்தை ஒப்புக் கொண்டாா். அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் இந்த வழக்கு விசாகணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. ராஜ்குமாரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT