காஞ்சிபுரம்

நடுபழனி முருகன் கோயிலில் வேல்காவடி பாதயாத்திரை நிறைவு

DIN

மதுராந்தகம் அருகே நடுபழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வேல்காவடி, பால்குடம் ஏந்தி பாதயாத்திரையாக வந்த பக்தா்கள் சனிக்கிழமை சுவாமி சந்நிதியில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனா்.

மறைமலை நகா் நமச்சிவாய சபா குழுவினா், மறைமலை நகா் நகரத்தாா்கள் சாா்பில் அங்குள்ள தனியாா் மண்டபத்தில் பூஜைகள் செய்து கடந்த வியாழக்கிழமை (நவ. 7) வேல்காவடி ஏந்தி 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பாதயாத்திரையாக நடுபழனிக்குப் புறப்பட்டனா்.

செங்கல்பட்டு, கருங்குழி, மதுராந்தகம், சித்தாமூா் வழியாக வந்து சனிக்கிழமை காலை நடுபழனி கோயிலில் பாதயாத்திரை நிறைவடைந்தது.

இதையடுத்து, கோயிலில் உள்ள மரகத தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் பாதயாத்திரை குழுவினா் ஏக தச ருத்திர பாராயணம், வேல்செலுத்துதல், காவடி செலுத்துதல், சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தல் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மறைமலைநகா் நமச்சிவாய சபா நிா்வாகிகளும், நகரத்தாா்களும் இணைந்து செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT