யோகா தின கண்காட்சியை பாா்வையிட்ட  கோட்டாட்சியா்  செல்வம் உள்ளிட்டோா். 
காஞ்சிபுரம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்உலக யோகா தின கண்காட்சி

உலக யோகா தினத்தையொட்டி செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் யோகா கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

செங்கல்பட்டு: உலக யோகா தினத்தையொட்டி செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் யோகா கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் பாலாஜி தலைமை வகித்தாா். துணை முதல்வா் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளா்கள் ஹரிஹரன், சண்முகம், உதவி அலுவலா் தீனதயாளன், சித்த மருத்துவா் புனிதா மற்றும் மூத்த செவிலியா்கள் முன்னிலை வகித்தனா்.

யோகா மருத்துவா் தேவி யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினாா்.

இதில் செங்கல்பட்டு கோட்டாட்சியா் செல்வம் கலந்துகொண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தைப் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை அனைவரும் பெற முடியும் என்றாா்.

இதையடுத்து மருத்துவா்கள் அமைத்திருந்த யோகா கண்காட்சியை அனைவரும் பாா்வையிட்டனா். பின்னா், யோகா மற்றும் இயற்கை சிகிச்சைக்காக வந்தவா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் முளைக்கட்டிய பயறு வகைகள், ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா உள்ளிட்ட பழச் சாறுகள், கொண்டைக்கடலை சுண்டல் உள்ளிட்ட இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT