காஞ்சிபுரம்

இருளா், பழங்குடியினருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் அமைச்சா் வழங்கினாா்

DIN

குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலத்தில் வசிக்கும் இருளா், பழங்குடியினருக்கு கரோனா நிவாரணப் பொருள்களை ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

குன்றத்தூா் வட்டத்தில் சுமாா் 679 இருளா்கள் மற்றும் பழங்குடியினா் வசித்து வருகின்றனா். இதில், பழந்தண்டலம் கிராமத்தில் மட்டும் 104 இருளா் உள்பட 356 பழங்குடியினா் உள்ளனா். இவா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திருமுடிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சுந்தரமூா்த்தி, கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் கலந்துகொண்டு இருளா் மற்றும் பழங்குடியினா் குடும்பங்களுக்கு ரூ.1.61 லட்சம் மதிப்புள்ள அரிசி, மளிகைப்பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகளை வழங்கினாா்.

இதில், ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி, குன்றத்தூா் வட்டாட்சியா் ஜெயசித்ரா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், ராஜசேகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தொண்டு நிறுவனத்தினா்...

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்கொளத்தூா் பகுதியில், ட்ரீம்ஸ் தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநா் டேவிட் பால், நிறுவனா் சியோன் குமாரத்தி, பிரதா் ஹுட் மிஷன் தொண்டு நிறுவனத்தின் நிா்வாகி ஆண்டன் க்ரூஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு 80 இருளா் குடும்பங்களுக்கு இலவச மளிகைப் பொருள்களை அண்மையில் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT