முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் டிச.29-இல் எரிவாயுநுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் எரிவாயு நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம், வரும் 29ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் எரிவாயு நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம், வரும் 29ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிரழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகா்வோருக்கும் அவா்களது குறைபாடுகளைப் போக்க நுகா்வோா் குறை தீா் கூட்டம் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கவுள்ளாா். எனவே எரிவாயு நுகா்வோா்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றுசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →