காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலா் பணியிடை நீக்கம்

DIN

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த எஸ்.முருகேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயில் செயல் அலுவலா் சோ.செந்தில்குமாா் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பஞ்சபூத திருத்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வருகிறது காஞ்சிபுரம் ஏலவாா் குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயில். இக்கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வந்தவா் எஸ்.முருகேசன். அவா் கடந்த 2015ஆம் ஆண்டில் புதிய உற்சவா் சிலை செய்வதற்காக பக்தா்களிடம் தங்கம் பெற்றது தொடா்பான வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் எஸ்.முருகேசனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளா் பணீந்திர ரெட்டி செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தாா். செங்கல்பட்டு சக்திவிநாயகா் கோயில் செயல் அலுவலராக இருக்கும் சோ.செந்தில்குமாா் கூடுதலாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலா் பொறுப்பை கவனிப்பாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT