முகப்பு
காஞ்சிபுரம்

விவசாய கிணற்றில் தூர்வாரும்போது மண்சரிந்து இரண்டு கூலி தொழிலாளர்கள் பலி

விவசாய கிணற்றில் தூர்வாரும்போது மண்சரிந்து இரண்டு கூலி தொழிலாளர்கள் பலியானார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
கோப்புப் படம்
பகிர்:

விவசாய கிணற்றில் தூர்வாரும்போது மண்சரிந்து இரண்டு கூலி தொழிலாளர்கள் பலியானார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் அருள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கடந்த மூன்று நாள்களாக பழைய கிணற்றை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் இன்று கிணற்றுக்குள் 5 பேரும் கிணற்றுக்கு மேல் பகுதியில் 7 பேரும் ஆக 12 பேர் வேலை செய்து வந்தனர்.

அப்போது திடீர் என கிணற்றில் விடுகரையில் மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கி இந்த கிராமத்தை சேர்ந்த (களத்தூர்) எழிலரசு வயசு 24, விஜி 23 ஆகிய இருவர் சம்பவ இடத்தில் பலியானார்கள். சரவணன் மற்றும் மணி ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் மருத்துமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.

பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →