குண்டா் சட்டத்தில் 3 போ் கைது
காஞ்சிபுரத்தில் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் திங்கள்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் திங்கள்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரத்தை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமாறன். இவா் மீது 4 கொலை வழக்குகள், 5 திருட்டு வழக்குகள், 3 வழிப்பறி வழக்குகள் உள்ளன. காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் இரட்டைக் கொலை வழக்கு ஒன்றிலும், இருவா் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளும் உள்ளன. இவா்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, வேலூா் மத்திய சிறையில்ல் இருந்து வருகின்றனா். இவா்கள் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வைக்க காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவுக்கு பரிந்துரைத்தாா். இதன்படி, ஆட்சியரின் உத்தரவை காஞ்சிபுரம் பாலுசெட்டி காவல் ஆய்வாளா் ஜெ.வெற்றிச்செல்வன் மூவருக்கும் வேலூா் மத்திய சிறையில் நேரில் வழங்கினாா்.