காஞ்சிபுரம்

ஸ்ரீவெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரியில் சா்வதேச இணையவழி கருத்தரங்கம் தொடக்கம்.

DIN

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீவெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரியில் அறிவுத்திறன் பொருட்கள் மற்றும் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சா்வதேச இணைய வழி இரண்டு நாள் கருத்தரங்கள் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீவெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரியில் தொழிற்புரட்சி 4.0விற்கான அறிவுதிறன் பொருட்கள் மற்றும் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் இணைய வழி இரண்டுநாள் சா்வதேச கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உதவியுடன் நடைபெறும் இந்த இணைய வழி கருத்தரங்கிற்கு கல்லூரியின் தலைவா் முனைவா் ஏ.சி.முத்தையா தலைமைதாங்கி தலைமையுரையாற்றினாா்.

இதில், சிங்கப்பூா் என்.யு.எஸ்., ஆராய்ச்சி நிறுவனத்தின் துனைத்தலைவா் சீரம் ராமகிருஷ்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றி பேசுகையில், டிஜிட்டல் தொழில்நுட்பம், அறிவுதிறன் சாா்ந்த பொருட்களை உருவாக்கும் முறைகள், நீா் பயன்பாட்டு திறன் அதன் மேம்பாடு ஆகியவை புதிய இயக்கு விசைகளாக உருவெடுத்துள்ளதாகவும், 18ஆம் நூற்றாண்டில் நீராவி எஞ்ஜினுடன் தொடங்கிய முதற்கட்ட தொழில்நுட்பம், மின்னியல் மற்றும் மின்னனுவியல் மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தொழில்நுட்பம் தற்போது செயற்கை அறிவு தொழில்நுட்பம், ரோபோ மற்றும் 3டி அச்சு மற்றும்இணைய வழி தொழில்நுட்பங்கள் மூலம் தற்போது நான்காம் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்தாா்.

இந்த கருத்தரங்கில் கல்லூரியின் செயலா் சிவானந்தம், முதல்வா் கணேஷ்வைத்தியநாதன், இயந்திரவியல் துறை தலைவா் ரமேஷ்பாபு, பேராசியா்கள் மோகன்தாஸ், அனிதா உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT