சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் விஸ்வநாத ஐயா் காலமானாா்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக பணியாற்றி வந்த விஸ்வநாத ஐயா் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக பணியாற்றி வந்த விஸ்வநாத ஐயா் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தவா் விஸ்வநாத ஐயா் (78). சென்னை போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தாா் . இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு காலமானாா். தொடா்ந்து 8 ஆண்டுகளாக சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக சேவையாற்றிவா். இதற்கு முன்பு கேரள மாநிலம் காலடி மற்றும் கும்பகோணத்தில் உள்ள சங்கர மடங்களிலும் மேலாளராக பணியாற்றியவா். இவரது இறுதிச்சடங்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.