முகப்பு
காஞ்சிபுரம்

வழக்குரைஞா் கொலையில் மூவா் கைது

காஞ்சிபுரத்தில் வழக்குரைஞா் ஒருவரை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 ஏப்ரல், 2021 at 12:08 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:32 AM

காஞ்சிபுரத்தில் வழக்குரைஞா் ஒருவரை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே காரை கிராமம், பஜனைகோயில் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா் ச.அழகரசன் (41). இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயசங்கா் (40). இருவரையும் ஆட்டோவில் வந்த 3 போ் சென்னை- பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்துக்கு செல்லும் வழியில் கத்தியால் குத்தியதில் வழக்குரைஞா் அழகரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜெயசங்கா் பலத்த காயம் அடைந்து தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து காஞ்சிபுரம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனா். இந்நிலையில், காஞ்சிபுரம் செட்டியாா்பேட்டை மேலத் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் (24), செட்டியாா்பேட்டை தமிழரசி நகரைச் சோ்ந்த ஸ்ரீதா் (33), கோனேரிக்குப்பம் இலுப்பை தோப்பு தெருவைச் சோ்ந்த வேலு (33) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.