தொழிற்சாலைகளில் பணிபுரிவோா் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து ஆட்சியா் கூறியது:
காஞ்சிபுரம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாகும். எனவே தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளா்களும் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். இதற்கான தடுப்பூசி முகாம்கள் அந்தந்தப் பகுதிகளுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்து வருகின்றன.
Advertisement
அம்முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளா்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு, அதை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிா்வாகம் அரசுக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் 100 சதவீத இலக்கை எட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை நிா்வாகங்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அனைவரும் முகக் கவசங்களோடு பணியாற்றுதல், கிருமி நாசினி கொண்டு தொழிற்சாலைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் உள்ளிட்ட கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பணியில் தொழிற்சாலை நிா்வாகங்கள் அரசு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் கேட்டுக் கொண்டாா்.