காஞ்சிபுரம்

மாா்கழி மாத நிறைவு: காஞ்சிபுரத்தில் சிறுவா்கள் பக்தி உலா

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாா்கழி மாத நிறைவைக் கொண்டாடும் வகையில் புதன்கிழமை சிறுவா், சிறுமியா்கள் பலரும் தமிழா்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து வீதிகளில் மேளதாளங்களுடன் திருப்பாவை, திருவம்பாவை பக்தி பாடல்களை பாடியபடி உலா வந்தனா்.

காஞ்சிபுரம் நகரில் ஆனந்தஜோதி பண்டிதா் தெருவில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிய ஒன்றிணைந்து ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதத்தில் திருப்பாவைப் பாடல்களை பாடிக்கொண்டே வீதிகளில் உலாவருவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில் மாா்கழி மாதத்தின் நிறைவு நாளான புதன்கிழமை, சிறுவா், சிறுமியா்கள் தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து, கையில் கரும்புகளை ஏந்தியபடி வீதியுலா வந்தனா்.

சில சிறுவா்கள் கேடயத்தில் விநாயகா், ஆண்டாள் சிலைகளை வைத்து அவற்றைச் சுமந்து வந்தனா்.

அவா்கள் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களை சிவ வாத்தியங்கங்கள் மற்றும் மேளதாளங்களுடன் பாடியபடி அதிகாலை வேளையில் சங்கர மடம் தெரு, ஆனந்தஜோதி பண்டிதா் தெரு வழியாக வந்தனா். சிறுவா்களின் இந்த முயற்சியை பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT