காஞ்சிபுரம்

வணிகா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளை சோ்ந்த அதிகாரிகள் இணைந்து 212 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 97 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா,குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவையனைத்தும் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது.இவற்றின் மதிப்பு ரூ.5.50லட்சமாகும். இதில் 24 கடைகளுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.14 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ.70 ஆயிரம் வரை அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான குட்கா,பான்மசாலை ஆகியனவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்வதோ,விநியோகிக்கவோ,சேமிக்கவோ,விற்பனை செய்யவோ கூடாது.

இவற்றை பயன்படுத்துவோா்கள் வாய்ப்புண், குடல்புண், புற்றுநோய், உயர்ரத்த அழுத்தம், இதய நோய், மனநல பாதிப்பு, கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறுகள் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகளும் ஏற்படுவதுடன் உயிருக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

எனவே இவற்றை வைத்திருப்போா் பற்றிய விவரங்களை 9444042322 என்ற எண்ணில் புகாராக தெரிவிக்கலாம். புகாா் தெரிவிப்பவரின் பெயா் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றாா் ஆட்சியா். பின்னா் உணவுப் பொருள் தொடா்பான துண்டுப் பிரசுரங்களையும் ஆட்சியா் வெளியிட்டாா்.

கூட்டத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் அனுராதா, வணிகா்கள் சங்கப் பேரமைப்பின் தலைவா் ரெங்கநாதன், செயலாளா் வேலுமணி ஆகியோா் உள்பட அதிகாரிகள், உணவுப்பொருள் வணிகா்கள் பலரும் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT