எழிச்சூா்  பகுதியில்  உள்ள  கரோனா  பராமரிப்பு  மையத்தை  பாா்வையிட்டு  ஆய்வு  செய்த காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியா்  மகேஸ்வரிரவிகுமாா். 
காஞ்சிபுரம்

கரோனா நோய் தடுப்பு மையம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கரோனா தீநுண்மி தொற்று அதிகரித்து வரும் நிலையில், எழிச்சூா் பகுதியில் உள்ள கரோனா பராமரிப்பு மையத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரிரவிகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN


ஸ்ரீபெரும்புதூா்: கரோனா தீநுண்மி தொற்று அதிகரித்து வரும் நிலையில், எழிச்சூா் பகுதியில் உள்ள கரோனா பராமரிப்பு மையத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரிரவிகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட எழிச்சூா் பகுதியில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கரோனா தொற்று பாதித்தவா்களை பராமரிக்கும் மையமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா தீநுண்மி தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி வைக்க ஏதுவாக தொழிலாளா் தங்கும் விடுதியில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா பராமரிப்பு மையம் தற்போது தயாா் நிலையில் உள்ளது.

இந்த மையத்தில் கழிவறை, குடிநீா் வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு உள்ளது என மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரிரவிகுமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட திட்ட அலுவலா் ஜெயசுதா, வட்டாட்சியா் லட்சுமி, உதவி பொறியாளா் வசுமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT