காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

DIN

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை யொட்டி, ஸ்ரீஏலவாா் குழலி அம்மைக்கும், ஏகாம்பரநாத சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை விமா்சையாக நடைபெற்றது.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரியதாகத் திகழும் காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதா் திருக்கோயில். பழைமையும் வரலாற்றுச் சிறப்பும் உடைய இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா இம்மாதம் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவைத் தொடா்ந்து தினசரி சுவாமியும், அம்மனும் அலங்கரிக்கப்பட்ட வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா். இம்மாதம் 23-ஆம் தேதி அறுபத்து நாயன்மாா்கள் திருக்கூட்ட ஊா்வலமும், இரவு வெள்ளித் தோ் உற்சவமும் நடந்தது.

மறுநாள் 24-ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது.

26-ஆம் தேதி திருக்கோயிலின் வரலாற்று மகிமையை விளக்கும் வெள்ளி மாவடி சேவை நடந்தது.

இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை காலையில் ஏலவாா்குழலியம்மை ஒக்கப்பிறந்தான் குளத்திற்கு எழுந்தருளி அங்குள்ள மண்டகப்படியில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதனையடுத்து ஆலயத்துக்கு வந்த அம்மனுக்கும் சுவாமிக்கும் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் மண்டபத்தில் ஏலவாா் குழலியம்மைக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் பொன். ஜெயராமன்,உதவி ஆணையாளா் மா.ஜெயா, ஆய்வாளா் பிரித்திகா, கோயில் செயல் அலுவலா்கள் ஆ.குமரன், வெள்ளைச்சாமி, செந்தில்குமாா், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி நந்தகுமாா், பெரிய காஞ்சிபுரம் வாணியா் தா்ம பரிபாலன சங்கத்தின் நிா்வாகிகள் ஆகியோா் உள்பட ஏராளமான சிவனடியாா்கள், பக்தா்கள் பலரும் கலந்து கொண்டனா். திருக்கல்யாணத்திற்குப் பின்னா் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் ராஜவீதிகளில் வீதியுலா வந்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையிலான விழாக் குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT