காஞ்சிபுரம்

காசியிலிருந்து, ராமேசுவரத்துக்கு காஞ்சிபுரம் வழியாக ரயில்: மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் விஜயேந்திரர் வேண்டுகோள் 

DIN

காசியிலிருந்து ராமேசுவரத்துக்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் இயக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கேட்டுக் கொண்டார். 
காஞ்சிபுரம் அருகேயுள்ள ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வரும் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு,கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.மத்திய அரசில் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக எல்.முருகன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 
மக்களுக்கு பல்வேறு துறைகளின் மூலமாக சேவை செய்யவும் அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இந்த வாய்ப்பை அவர் நல்லமுறையில் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும்.காசியிலிருந்து ராமேசுவரத்துக்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் இயக்க வேண்டும் எனவும் விஜயேந்திரர் மத்திய அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். 

முன்னதாக ஓரிக்கை மணி மண்டப நுழைவு வாயிலில் காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் என்.சுந்தரேச ஐயர் மாலை அணிவித்து வரவேற்றார். அமைச்சருடன் பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு,துணைத் தலைவர் ஓம்.சக்தி பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் கூரம்,விஸ்வநாதன், அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்க மாநிலத்துணைத் தலைவர் டி.கணேஷ், காஞ்சிபுரம் நகர் பொதுச்செயலாளர் காஞ்சி.வி.ஜீவானந்தம் உட்பட பாஜக நிர்வாகிகள் பலரும் உடன் வந்திருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT