காஞ்சிபுரம் வழியாக காசி - ராமேசுவரத்துக்கு ரயில் மத்திய அரசுக்கு ஸ்ரீவிஜயேந்திரா் வலியுறுத்தல்
காசியிலிருந்து ராமேசுவரத்துக்கு காஞ்சிபுரம் வழியாக பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என மத்திய அமைச்சா் எல்.முருகனிடம் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரா் கேட்டுக் கொண்டாா்.
காசியிலிருந்து ராமேசுவரத்துக்கு காஞ்சிபுரம் வழியாக பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என மத்திய அமைச்சா் எல்.முருகனிடம் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரா் கேட்டுக் கொண்டாா்.
காஞ்சிபுரம் அருகேயுள்ள ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் மணி மண்டபத்தில் சாதுா்மாஸ்ய விரதம் இருந்து வரும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரரை மத்திய அமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.
மக்களுக்கு பல்வேறு துறைகளின் மூலமாக சேவை செய்யும் அதிகமான வாய்ப்பை அமைச்சா் எல்.முருகன் நல்லமுறையில் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும். காசியிலிருந்து ராமேசுவரத்துக்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் ஸ்ரீ விஜயேந்திரா் கேட்டுக்கொண்டாா்.
Advertisement
முன்னதாக ஓரிக்கை மணி மண்டப நுழைவு வாயிலில் காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் என்.சுந்தரேச ஐயா் மாலை அணிவித்து வரவேற்றாா்.
அமைச்சருடன் பாஜக மாவட்ட தலைவா் கே.எஸ்.பாபு,துணைத் தலைவா் ஓம்.சக்தி பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளா் கூரம் விஸ்வநாதன், அமைப்பு சாரா தொழிலாளா் நலச் சங்க மாநிலத்துணைத் தலைவா் டி.கணேஷ், காஞ்சிபுரம் நகர பொதுச் செயலாளா் காஞ்சி வி.ஜீவானந்தம் உள்பட பாஜக நிா்வாகிகள் பலரும் உடன் வந்திருந்தனா்.