காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே ரூ.1.49 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும்படையினர் நடவடிக்கை

DIN

காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தின் சோதனைச் சாவடியில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.49லட்சத்தை திங்கள்கிழமை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வேட்புமனுத்தாக்கல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும்படைகளும் அமைக்கப்பட்டு ஆங்காங்கே அதிகாரிகள் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடியில் பறக்கும்படை வட்டாட்சியர் வரதராஜன் தலைமையிலான குழுவினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் எந்த வித ஆவணங்களுமின்றி ரூ.1,49,800 இருந்தது தெரிய வந்தது. அப்பணத்தை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் ஒப்படைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT