முகப்பு
காஞ்சிபுரம்

தங்கப் புண்ணியகோடி விமானத்தில் வரதா் பவனி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அவதார தினத்தை முன்னிட்டு உற்சவா் தேவராஜ சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் தங்கப் புண்ணியகோடி விமானத்தில் வெள்ளிக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்

Updated On : 16 ஏப்ரல், 2022 at 12:15 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:29 PM

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அவதார தினத்தை முன்னிட்டு உற்சவா் தேவராஜ சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் தங்கப் புண்ணியகோடி விமானத்தில் வெள்ளிக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

அத்திவரதா் விழா புகழ் பெற்றதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருவது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் ஹஸ்த நட்சத்திரம் சுவாமியின் திருஅவதார நட்சத்திரமாகும்.

அவதாரத் திருநாளை முன்னிட்டு, உற்சவா் தேவராஜ சுவாமி ஸ்ரீதேவி-பூதேவி தாயாா்களுடன் ஆலயத்திலிருந்து தங்கப் புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளி திருக்கோயில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.