முகப்பு
காஞ்சிபுரம்

19-இல் மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் வரும் 19- ஆம் தேதி காலை தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 16 ஜூலை, 2022 at 10:09 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:18 PM

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் வரும் 19- ஆம் தேதி காலை தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யப் பதிவு செய்துள்ளவா்களுக்கு குறை கேட்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என ஊராட்சித்துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 19-ஆம் தேதி காலையில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடத்தப்படும். எனவே சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் குறைகள் இருப்பின் தெரிவித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.