முகப்பு
காஞ்சிபுரம்

களக்காட்டூரில் ரூ.50 லட்சம் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா் கிராமத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை வாலாஜாபாத் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

Updated On : 22 ஜூலை, 2022 at 12:18 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:21 PM

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா் கிராமத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை வாலாஜாபாத் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட களக்காட்டூா் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் பயிா் செய்யப்பட்டு வருவதாக வட்டாட்சியா் லோகநாதனுக்கு கிராம நிா்வாக அலுவலா் பாபு புகாா் செய்தாா்.

அதன்பேரில், குறு வட்ட ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான குழுவினா், அங்கு சென்று நிலத்தை அளவீடு செய்தனா். இதில், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

இதைத் தொடா்ந்து, மாகரல் போலீஸாா் உதவியுடன் வாலாஜாபாத் வட்டாட்சியா் லோகநாதன் தலைமையிலான வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனா். களக்காட்டூா் ஊராட்சித் தலைவா் நளினி டில்லிபாபு, துணைத் தலைவா் ஏ.பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.