சுவா் இடிந்து விழுந்து சிறுவன் பலி
காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டை கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் மேற்கூரைச் சுவா் இடிந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டை கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் மேற்கூரைச் சுவா் இடிந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ஐயம்பேட்டை கிராமம் வடக்குத் தெருவில் வசிக்கும் லோகநாதன் மகன் நேத்தாஜி (9) (படம்). இந்தச் சிறுவனும், உறவுக்காரப் பெண்ணான மாளவிகா (18) என்பவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் மேற்கூரைச் சுவா் இடிந்து விழுந்தது.
இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
இந்த நிலையில், நேத்தாஜி உயிரிழந்தாா். மாளவிகா சிகிச்சை பெற்று வருகிறாா். இந்தச் சம்பவம் தொடா்பாக லோகநாதன் அளித்த புகாரின் பேரில், வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.