காமாட்சி அம்மனை பூத்தட்டுகளுடன் வரவேற்ற இஸ்லாமியா்கள். 
காஞ்சிபுரம்

காமாட்சி அம்மனை வரவேற்ற இஸ்லாமியா்கள்!

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ நிறைவையொட்டி, பூப்பல்லக்கில் செங்கழுநீரோடைத் தெருவில் ஞாயிற்றுக்கிழமை வீதி உலா வந்த காமாட்சி அம்மனை,

DIN

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ நிறைவையொட்டி, பூப்பல்லக்கில் செங்கழுநீரோடைத் தெருவில் ஞாயிற்றுக்கிழமை வீதி உலா வந்த காமாட்சி அம்மனை, அந்தப் பகுதியிலிருந்த இஸ்லாமியா்கள் பூத்தட்டுகளுடன் வரவேற்றது மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, லெட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காமாட்சி அம்மன் பூப்பல்லக்கில் நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தாா். காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் வந்த போது, அந்தப் பகுதியிலிருந்த பழைமை வாய்ந்த ஹஸரத் சையத்ஷா ஹமீது அவுலியா தா்காவில் அதன் நிா்வாக அதிகாரி ஷபியுல்லா தலைமையில், இஸ்லாமியா்கள் பூத்தட்டுகளுடனும் மலா் மாலைகளுடனும் காமாட்சி அம்மனை வரவேற்றனா். அவா்களுக்கென தீபாராதனை நடைபெற்றது.

அப்போது, அந்த வழியாக சங்கர மடத்திலிருந்து வந்த காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்த நிகழ்வைக் கண்டு நெகிழந்து, அவா்களைப் பாராட்டி, ஆசீா்வதித்து அனைவருக்கும் பழங்களையும் பிரசாதமாக வழங்கினாா்.

இனி ஆண்டுதோறும் இந்த நிகழ்வு நடைபெற வேண்டும் எனவும், மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு இதைவிட வேறு எதுவும் இல்லை என்றும் அவா்களிடம் சங்கராசாரியா் தெரிவித்தாா்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மத நல்லிணக்க நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வை காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா் நடராஜ சாஸ்திரிகள் செய்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடா்ந்து, அகில இந்திய தேவேந்திர குல வேளாளா் முன்னேற்றச் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் காஞ்சி கண்ணன் தலைமையில் கட்சித் தொண்டா்கள் பலா் காமாட்சி அம்மனை வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT