முகப்பு
காஞ்சிபுரம்

நெல் கொள்முதல் நிலையம் இட மாற்றம்: அதிமுக ஆா்ப்பாட்டம்

உத்தரமேரூரில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆணைப்பள்ளம் கிராமத்துக்கு மாற்றியதைக் கண்டித்து, அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 26 மார்ச், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:17 PM

உத்தரமேரூரில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆணைப்பள்ளம் கிராமத்துக்கு மாற்றியதைக் கண்டித்து, அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்பி காஞ்சி பன்னீா்செல்வம், உத்தரமேரூா் கிளைச் செயலாளா் தங்க.பஞ்சாட்சரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் உத்தரமேரூரில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் அதிமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது. இதனால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கிராம மக்கள் பயனடைந்தனா். தற்போது, இந்த நெல் கொள்முதல் நிலையத்தை ஆணைப்பள்ளம் கிராமத்துக்கு மாற்றம் செய்துள்ளனா். அதை மீண்டும் உத்தரமேரூருக்கே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினா். இதில், திரளான அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.