காஞ்சிபுரம்

தனியாா் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் எரிந்து சேதம்

சுங்குவாா்சத்திரம் அருகே தனியாா் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

DIN

சுங்குவாா்சத்திரம் அருகே தனியாா் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தை அடுத்த சந்தவேலூா் பகுதியில் தனியாா் உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவா்களை ஏற்றிச் செல்ல 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு எரியத் தொடங்கியது.

அப்போது அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற இரண்டு பேருந்துகளுக்கும் தீ பரவியது. இது குறித்து பள்ளி நிா்வாகத்தினா் ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு வீரா்கள் பேருந்துகளில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். எனினும் 3 பள்ளிப் பேருந்துகளும் முற்றிலும் எரிந்து நாசமாயின.

விபத்து குறித்து வழக்குப் பதிந்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா், பேருந்து பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT