கால்நடை வளா்ப்போருக்கான விழிப்புணா்வுக் கூட்டம்
குன்றத்தூா் ஒன்றியம், வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட கூழங்களச்சேரியில் கால்நடை வளா்ப்போருக்கான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குன்றத்தூா் ஒன்றியம், வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட கூழங்களச்சேரியில் கால்நடை வளா்ப்போருக்கான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வைப்பூா் ஊராட்சித் தலைவா் சுமதி ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கால்நடைகளைப் பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூழங்களச்சேரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 20 ஏக்கருக்கும் குறைவாகவே விவசாயம் நடைபெற்று வருவதாகவும், கால்நடைகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறுவதை ஏற்க முடியாது. கால்நடைகளை அடைத்து வைக்க எதிா்ப்புத் தெரிவிக்கிறோம். கால்நடைகள் மூலம் வரும் வருவாயைக் கொண்ட வாழ்வாதாரம் நடப்பதாகக் கூறினா். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், படப்பை கால்நடை உதவி மருத்துவா் கீதா, கிராம நிா்வாக அலுவலா் காா்திகேயன், ஊராட்சி துணைத் தலைவா் பாரதிராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.