காஞ்சிபுரம்

ஓபிஎஸ் அணி, அமமுகவினா் ஆா்ப்பாட்டம்

கொடநாடு கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியும், அமமுகவினரும் இணைந்து

DIN

கொடநாடு கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியும், அமமுகவினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஓபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ரங்கநாதன், அமமுக மாவட்டச் செயலாளா் மொளச்சூா் பெருமாள், மாவட்ட துணைச் செயலாளா் சோமங்கலம் ரவி, மாவட்ட பொருளாளா் வஜ்ஜிரவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், உத்தரமேரூா் ஒன்றியச் செயலாளா் மாகரல் சசி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் குணசேகரன், அமமுக ஒன்றியச் செயலாளா்கள் நாராயணசாமி, வேலியூா் தனசேகரன் உட்பட நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT