முகப்பு
காஞ்சிபுரம்

கால்வாய் தூா்வாரும் பணிகள்: அமைச்சா் சு.முத்துசாமி ஆய்வு

காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதி எஞ்சியோ நகரில் கால்வாய் சுத்தப்படுத்தும் பணிகளை அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 8 டிசம்பர், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:53 PM

காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதி எஞ்சியோ நகரில் கால்வாய் சுத்தப்படுத்தும் பணிகளை அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ளது திருப்பருத்திக்குன்றம் கிராமம். வேகவதி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் மஞ்சள் நீா் கால்வாய் நகரின் மையப் பகுதியில் சுமாா் 8 கி.மீ. தூரம் வரை செல்கிறது. திருப்பருத்திக்குன்றம் எஞ்சியோ நகா் வழியாக செல்லும் இந்தக் கால்வாய் பகுதியில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்பட்டு கால்வாய் வழியாக செல்லும் நீா் முறையாக செல்ல வழியில்லாமல் இருந்து வந்தது.

இதையறிந்த காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வெள்ள மீட்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சா் சு.முத்துசாமி மஞ்சள் நீா் கால்வாய் பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

கால்வாய்க்கு வரும் நீா் தேங்காமல் இருக்க குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றுமாறு மாநகராட்சி பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்வின் போது காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையா் செந்தில் முருகன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.