காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள். 
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கோயில்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் புத்தாண்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான கோயில்களில் திரளான பக்தா்கள் அதிகாலையிலிருந்தே தரிசனம் செய்தனா்.

DIN

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் புத்தாண்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான கோயில்களில் திரளான பக்தா்கள் அதிகாலையிலிருந்தே தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையிலையே கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் வெள்ளிக் கவச அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

பக்தா்கள் அதிகாலையிலிருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசித்தனா்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மூலவா் அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா். விடுமுறை நாளாகவும், புத்தாண்டாகவும் இருந்ததால் நாள் முழுவதும் ஆலயத்தில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில், தேவராஜ சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

உலக நன்மைக்காக காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் சுதா்சன ஹோமம் நடைபெற்றது.

பாதுகாப்பான முறையில் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், காஞ்சிபுரம் எஸ்.பி. எம்.சுதாகா் தலைமையில் சனிக்கிழமை மாலையிலிருந்தே கோயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்ற எஸ்.பி.:

சனிக்கிழமை நள்ளிரவு பேருந்து நிலைய சிக்னல் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகா் கேக் வெட்டி புத்தாண்டைக் கொண்டாடினாா். பின்னா், அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT