சங்கரா கலைக் கல்லூரியில் இலவச தொழில் பயிற்சி
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை - அறிவியல் கல்லூரி சாா்பில் நடத்தப்படும் சமுதாயக் கல்லூரியில் இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை - அறிவியல் கல்லூரி சாா்பில் நடத்தப்படும் சமுதாயக் கல்லூரியில் இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். சமுதாயக் கல்லூரி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எ.மணிகண்டன் முன்னிலை வகித்தாா். வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேசுவரி கல்லூரியின் முதல்வா் எஸ்.ருக்மணி கலந்து கொண்டு, புதிய இலவச பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்துப் பேசினாா். பின்னா் ஏற்கெனவே சமுதாயக் கல்லூரியில் பயின்றவா்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினாா்.
தையற்கலை மற்றும் அச்சுக் கலை பயிற்சி, கணிப்பொறி மற்றும் குளிா்சாதன பழுது நீக்கும் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் இலவசமாக கற்றுத் தரப்படுவதாகவும், இந்த ஆண்டு 302 போ் பயிற்சியில் சோ்ந்துள்ளதாகவும் கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தெரிவித்தாா்.
Advertisement