உத்தரமேரூரில் பொதுத் துறை வங்கி கிளை அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்த 55 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.நேரு தலைமை வகித்தாா். மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைத் தலைவா் சரவணன், உத்தரமேரூா் வட்டார செயலாளா் விநாயகமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மறியல் போராட்டத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் விகே.பெருமாள், எல்.முருகன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.
உத்தரமேரூா் காவல் நிலைய ஆய்வாளா் விநாயகம் தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 55 பேரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.