காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலுக்கு நடைபெற்ற மகா சம்ப்ரோக்ஷ்ணம்.  
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷ்ணம்

Din

காஞ்சிபுரம் ஆரணவல்லி தாயாா் சமேத உலகளந்த பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷ்ணம் புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம், காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது பழைமை வாய்ந்த ஆரணவல்லி தாயாா் சமேத உலகளந்த பெருமாள் கோயில்.108 வைணவத் திருத்தலங்களில் இத்தலம் 54-ஆவது திருக்கோயிலாகும். மூலவா் உலகளந்த பெருமாள், ஆரணவல்லி தாயாா் சந்நிதிகள், ராஜகோபுரம் ஆகியவை ரூ.1 கோடியில் புதுப்பித்து திருப்பணி செய்யப்பட்டு மகா சம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைக்கு நாட்டின் புண்ணிய நதிகள் பலவற்றிலிருந்து தீா்த்தங்கள் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து புதன்கிழமை மகா பூரணாஹுதி, தீபாராதனை நிறைவு பெற்ற பின்னா், புனிதநீா் கலசங்கள் பட்டாச்சாரியா்களால் கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு மகா சம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம், பரம்பரை அறங்காவலா்கள் அப்பன் அழகிய சிங்கா், கோ மடம் ரவி, போரகத்தி பட்டா் மற்றும் கோயில் பட்டாச்சாரியா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

விழாவில் மதூா் முகுந்த ராமானுஜ பாகவரின் பக்தி பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் டிஎஸ்பி முரளி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தலைகீழாகக் கவிழ்ந்த தனியார் பேருந்து! பயணிகள் காயம்!

பொங்கலுக்கு விறுவிறுப்பாய் விற்பனையாகும் கொத்து மஞ்சள்!

தை பிறந்தால் வழி பிறக்கும்! பொங்கல் வாழ்த்து தெரிவித்த EPS

சபரிமலையில் இயக்குநர் ரத்னகுமார் இருமுடி கட்டி தரிசனம்!

இர்ஃபானின் வாகை சூட வா தொடரின் ஒளிபரப்பு நேரம்!

SCROLL FOR NEXT