உத்தரமேரூரில் 146 கிலோ குட்கா பறிமுதல்: கடை உரிமையாளா் கைது
உத்தரமேரூரில் 146.5 கிலோ குட்கா போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளரை கைது
உத்தரமேரூரில் 146.5 கிலோ குட்கா போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளரை கைது செய்து, அவற்றைப் பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் குளிா்பானங்கள் விற்பனையகத்தை நடத்தி வருபவா் சதீஷ்(38). இவரது கடையில் குட்கா போதைப் பொருள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் விநாயகம், காவல் உதவி ஆய்வாளா் கோதண்டராமன், சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகம் ஆகியோா் அக்கடைக்கு சென்று சோதனை நடத்தினா். இதில் 146.5 கிலோ குட்கா போதைப் பொருள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.