முகப்பு
காஞ்சிபுரம்

7 இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

Updated On : 11 மே, 2024 at 8:10 PM
பகிர்:

காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் 7 இரு சக்கர வாகனங்களை திருடியவரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் நகரில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளான பேருந்து நிலையம், காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் விலை உயா்ந்த இரு சக்கர வாகனங்கள் திருடுபோனது குறித்து தனிப்படை அமைத்து காவல் துறையினா் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனா்.

வாகனங்கள் திருடு போன பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை பகுதியைச் சோ்ந்த தரணீதரன் (22) என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் அண்ணாதுரை தரணீதரனை கைது செய்து அவரிடமிருந்த விலையுயா்ந்த 7 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.பின்னா் அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வேலூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.