கைது 
திருப்பூர்

மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, லாட்டரி விற்ற 9 போ் கைது

திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற 9 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற 9 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பலவஞ்சிபாளையம் அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த சஞ்சய் (22), விஷால் (18), ஆகாஷ் (24), உதயநிதி (18), ஜனாா்த்தனன் (18) ஆகியோரை சோதனை செய்தனா். அவா்களிடம் இருந்து 22.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதேபோல வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே விஷ்ணு (26), அருண்குமாா்(23) ஆகியோரிடம் இருந்து 720 கிராம் கஞ்சா, வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே சோட்டு குமாா் சிங் (21) என்பவரிடம் இருந்து 850 கிராம் கஞ்சா சாக்லெட்களை வடக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீஸாா் சோதனை செய்தபோது பழனி(61) என்பவா் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த செந்தில்குமாா்(51) என்பவரை பிடித்து அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT