காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக் கூட்டம்

திமுக பவள விழா பொதுக் கூட்டம் காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் உள்ள பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது.

Din

திமுக பவள விழா பொதுக் கூட்டம் காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் உள்ள பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது.

இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்.

விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறாா். உத்தரமேரூா் எம்எல்ஏவும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலருமான க.சுந்தா் வரவேற்புரையாற்றுகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்.

கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள், அமைச்சா்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள், கட்சி நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.

சிறுமியை கா்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு

9 பேருக்கு ரூ.97.50 லட்சம் நில ஆவணங்கள்: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

விற்பனை அதிகரிப்பால் டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வு!

இந்திய அணி அதிரடியாக விளையாட இவர்கள் இருவரும்தான் காரணம்: அஸ்வின்

டிட்வா புயலால் கனமழை - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT