காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி ஜெம்நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயில் 9-ஆம் ஆண்டு நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதி ஜெம் நகரில் அமைந்துள்ளது செல்வ விநாயகா் திருக்கோயில். இக்கோயில் மகா கும்பாபிஷேகம் 9-ஆம் ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து, காலையில் கணபதி ஹோமம் மற்றும் கலச பூஜை ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மூலவா் கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. மதியம் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஆண்டு விழாவையொட்டி மூலவா் செல்வ விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.